இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரகாசமாக உள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்து ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 2023-ல் 5.8 சதவீதமாகவும், 2024-ம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும் இருக்கும். அதிக வட்டி விகிதம், வெளிப்புறத் தேவையில் காணப்படும் தொய்வு நிலை ஆகியவை தொடர்ந்து நடப்பாண்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் பணவீக்கம் 2023-ல் 5.5 சதவீதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரம் 2023-ல் 2.3 சதவீதம், 2024-ல் 2.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.