இந்தியாவின் ஜனவரி மாத மின் நுகர்வு 13% உயர்ந்து, 126.16 பில்லியன் யூனிட்டுகளாக பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. மின் நுகர்வு அதிகரித்துள்ளது நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதை குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. அதே வேளையில், வட இந்தியாவில் தற்போது குளிர் காலம் நிலவுவதால், ஹீட்டர் பயன்பாடு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டது. அதன் விளைவாக, மின் நுகர்வு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதத்தில், அதிகபட்சமாக ஒரு நாள் மின் பயன்பாடு 210.61 ஜிகாவாட் ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 2022 ஜனவரியில் 111.8 பில்லியன் யூனிட்டுகளும், 2021 ஜனவரியில் 109.76 பில்லியன் யூனிட்டுகளும் மின் நுகர்வு பதிவானது. எனவே, தொடர்ச்சியாக, இந்தியாவின் மின் நுகர்வு அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே போன்று, ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச மின் நுகர்வு எண், 2022 ஜனவரியில் 192.18 ஜிகாவாட் ஆகவும், 2021 ஜனவரியில் 189.39 ஜிகாவாட் ஆகவும் பதிவாகியுள்ளது.














