ஓலா எலக்ட்ரிக் நிறுவனர் பாவிஷ் அகர்வால், நிறுவனத்தின் ஐபிஓ மூலம் உலகின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இது மிகப்பெரிய சாதனையாகும்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவப்பட்டதில் இருந்து தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தது. மேலும், பேட்டரி தீ விபத்து போன்ற பல்வேறு சர்ச்சைகளையும் சவால்களையம் எதிர்கொண்டது. பாவிஷ் அகர்வால், அனைத்தையும் சமாளித்து நிறுவனத்தை யூனிகார்ன் நிலைக்கு உயர்த்தியுள்ளார். இது அவரது திறமைக்கான சான்றாக பார்க்கப்படுகிறது. தனது 38 வயதில், $1.2 பில்லியன் சொத்து மதிப்பு உயர்வு என்பது அவரது தொழில் முனைவோர் பயணத்தில் முக்கிய மைல்கல் ஆகும். அவரது லட்சியம் மற்றும் தைரியமான அணுகுமுறைக்காக, அவரை இந்தியாவின் எலோன் மஸ்க் என்று புகழ்கிறார்கள்.