இந்தியாவின் ஜனவரி மாத ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு சரிவு

February 15, 2023

இந்தியாவின் ஜனவரி மாத ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரிந்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்றுமதி மதிப்பு, முந்தைய ஆண்டை விட 6.58% குறைந்து, 32.91 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தை விடவும் குறைவாகும். டிசம்பர் மாதத்தில் 34.48 பில்லியன் டாலர்கள் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது. அதே வேளையில், இந்தியாவின் இறக்குமதி வருடாந்திர அடிப்படையில் 3.63% குறைந்து, 50.66 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இது 58.24 […]

இந்தியாவின் ஜனவரி மாத ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரிந்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏற்றுமதி மதிப்பு, முந்தைய ஆண்டை விட 6.58% குறைந்து, 32.91 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தை விடவும் குறைவாகும். டிசம்பர் மாதத்தில் 34.48 பில்லியன் டாலர்கள் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டது.

அதே வேளையில், இந்தியாவின் இறக்குமதி வருடாந்திர அடிப்படையில் 3.63% குறைந்து, 50.66 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இது 58.24 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படையில் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஜனவரி மாதத்தில் சரிவடைந்துள்ளது. மேலும், ஜனவரி மாத வர்த்தக இடைவெளி 17.75 பில்லியன் டாலர்கள் மதிப்பில் பதிவாகியுள்ளது. அத்துடன், நடப்பு நிதி ஆண்டில், மொத்தமாக, ஏற்றுமதி மதிப்பு 8.51% உயர்ந்து 369.25 பில்லியன் டாலர்கள் அளவிலும், இறக்குமதி மதிப்பு 21.89% உயர்ந்து 602.20 பில்லியன் டாலர்கள் அளவிலும் பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu