கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் வர்த்தக இடைவெளி 10 மாத உயர்வான அளவை எட்டி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு 60.87 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. இது 4.2% சரிவாகும். அதே வேளையில், ஒட்டுமொத்த இறக்குமதி 72.5 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. இது 5.97% சரிவாகும். ஆகவே, மொத்த வர்த்தக இடைவெளி 24.16 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 2.8% சரிவாகும்.
துறைவாரியாக, பொருட்கள் இறக்குமதி 5.2% சரிந்து, 58.64 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், பொருட்கள் ஏற்றுமதி, 3 மாத உச்சமாக, 34.48 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 6.8% சரிவாகும். அதே வேளையில், சேவைகள் ஏற்றுமதி 0.4% சரிந்து 26.39 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. சேவைகள் இறக்குமதி 8.9% சரிந்து 13.86 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது.