இந்தியாவின் வெளிநாட்டு கடன் மதிப்பு 624.7 பில்லியன் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

September 11, 2023

இந்தியாவின் வெளிநாட்டு கடன் மதிப்பு 624.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆயினும், நாட்டின் நிதி நிலை சுமூகமான நிலையில் உள்ளதாகவும், வெளியுறவு விவகாரங்கள் சகஜ நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாத இறுதியில், இந்தியாவின் கடன் தொகை 624.7 பில்லியன் டாலர் அளவில் உள்ளது. அதன்படி, கடன் மற்றும் சேவைகள் விகிதம் 5.3% ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இது சுமுகமான அளவாகும் என அமைச்சர் நிர்மலா […]

இந்தியாவின் வெளிநாட்டு கடன் மதிப்பு 624.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆயினும், நாட்டின் நிதி நிலை சுமூகமான நிலையில் உள்ளதாகவும், வெளியுறவு விவகாரங்கள் சகஜ நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாத இறுதியில், இந்தியாவின் கடன் தொகை 624.7 பில்லியன் டாலர் அளவில் உள்ளது. அதன்படி, கடன் மற்றும் சேவைகள் விகிதம் 5.3% ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இது சுமுகமான அளவாகும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அத்துடன், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டு கடன் மதிப்பு 20% அளவில் இருந்து 18.9% ஆக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீண்ட கால கடன் 79.4% ஆகவும், குறுகிய கால கடன் 20.6% ஆகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சாதகமான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் வெளிநாட்டு கடனில் 92.6% அளவு, அந்நிய செலாவணி கையிருப்பு மூலம் நிறைவு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu