இந்தியாவின் அந்நிய செலாவணி இ௫ப்பு, 2 வார வீழச்சிக்குப் பின் உயர்வு

November 5, 2022

முந்தைய இரண்டு வாரங்களாக, தொடர் சரிவை பதிவு செய்து வந்த அந்நிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்தில் உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 6.56 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 531.08 பில்லியன் டாலர்களாக பதிவாகி உள்ளது. ஒரே வாரத்தில் இத்தகைய பெரும் உயர்வை எட்டுவது, கடந்த ஒரு வருடத்தில் இதுவே முதல் முறையாகும். கடந்த வருட செப்டம்பர் மாதத்திற்கு பின்னர், நடப்பு ஆண்டில், அக்டோபர் 28ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், […]

முந்தைய இரண்டு வாரங்களாக, தொடர் சரிவை பதிவு செய்து வந்த அந்நிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்தில் உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 6.56 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 531.08 பில்லியன் டாலர்களாக பதிவாகி உள்ளது. ஒரே வாரத்தில் இத்தகைய பெரும் உயர்வை எட்டுவது, கடந்த ஒரு வருடத்தில் இதுவே முதல் முறையாகும். கடந்த வருட செப்டம்பர் மாதத்திற்கு பின்னர், நடப்பு ஆண்டில், அக்டோபர் 28ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இத்தகைய உயர்வு எட்டப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 13 வாரங்களில், 11 வாரங்கள், இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு சரிந்து வந்தது. அக்டோபர் 7ம் தேதியுடன் நிறைவடைந்த வாரம் மற்றும் அக்டோபர் 28ஆம் தேதி உடன் நிறைவடைந்த வாரம் ஆகிய இரண்டில் மட்டுமே அந்நிய செலாவணி இருப்பு உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நாணயங்கள் இருப்பு மற்றும் நாட்டின் மொத்த தங்க இருப்பு ஆகியவை உயர்ந்துள்ளதால், கடந்த வாரத்தில் அந்நிய செலாவணி இருப்பு உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அக்டோபர் 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் தங்க இருப்பு உயர்ந்ததால், 204 மில்லியன் டாலர்கள் அந்நிய செலாவணி இருப்பு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், அதைத் தொடர்ந்து வந்த, அக்டோபர் 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி இருப்பு மிகக் குறைந்த அளவை பதிவு செய்தது. அந்த குறிப்பிட்ட வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 524.52 பில்லியன் டாலர்களாக பதிவாகி இருந்தது.

கடந்த வாரத்தில் வெளிநாட்டு நாணயங்களின் இருப்பு 5.77 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 470.85 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. மேலும், நாட்டின் தங்க இருப்பு 556 மில்லியன் டாலர்கள் உயர்ந்து, 37.762 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பை ஈடுகட்ட, அந்நிய செலாவணியில் இருந்து 111.37 பில்லியன் டாலர்களை மத்திய ரிசர்வ் வங்கி பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu