2023 முதல் வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பு 1.3 பில்லியன் டாலர்கள் சரிவு

January 14, 2023

2023 ஆம் ஆண்டின் முதல் வார இறுதியில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.268 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளது. ஜனவரி 6-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி மதிப்பு 561.583 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளியில் விவரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, டிசம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி மதிப்பு 562.851 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தங்க இருப்பு […]

2023 ஆம் ஆண்டின் முதல் வார இறுதியில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.268 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளது. ஜனவரி 6-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி மதிப்பு 561.583 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளியில் விவரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, டிசம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி மதிப்பு 562.851 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தங்க இருப்பு 461 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்த 41.784 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அத்துடன், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 633 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அந்நிய செலாவணி இருப்பு, தற்போது 100 பில்லியன் அளவிற்கு குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் நிலையற்ற பொருளாதார தன்மை காரணமாக அந்நிய செலாவணியில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu