கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 5.68 பில்லியன் டாலர்கள் சரிந்து, 561.27 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் தகவல்கள் அடிப்படையில், பிப்ரவரி 17ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் வெளிநாட்டு நாணய சொத்து மதிப்பு 4.52 பில்லியன் டாலர்கள் சரிந்துள்ளது. அதன் தற்போதைய மதிப்பு 496.07 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதே வேளையில், இந்தியாவின் தங்கம் இருப்பு 1.04 பில்லியன் டாலர்கள் சரிந்து, 41.82 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் எஸ் டி ஆர் 87 மில்லியன் சரிந்து, 18.26 பில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.