இந்தியா, 2 வருடத்தில் மிகக் குறைந்த அந்நியச் செலாவணி இருப்பை பதிவு செய்துள்ளது

September 24, 2022

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு தொடர்ந்து ஏழாவது வாரமாக சரிவில் உள்ளது. செப்டம்பர் 16ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 545.652 பில்லியன் டாலர்களாக உள்ளது. செப்டம்பர் 9 ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், இது 550.871 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி, குறைவான அளவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர், தற்போது, குறைவாகப் பதிவாகியுள்ளது. இதனை, மத்திய ரிசர்வ் […]

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு தொடர்ந்து ஏழாவது வாரமாக சரிவில் உள்ளது. செப்டம்பர் 16ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 545.652 பில்லியன் டாலர்களாக உள்ளது. செப்டம்பர் 9 ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில், இது 550.871 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி, குறைவான அளவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர், தற்போது, குறைவாகப் பதிவாகியுள்ளது. இதனை, மத்திய ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளியியல் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின் படி, கடந்த வாரத்தில், அந்நிய நாணய மதிப்பு 484.901 பில்லியன் டாலர்கள் ஆகும். தங்கத்தின் இருப்பு 38.186 பில்லியன் டாலர்கள் ஆகும்.

அதே வேளையில், நேற்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.20 ஆக, வரலாற்றுச் சரிவை சந்தித்துள்ளது. அத்துடன், இந்திய பங்குச் சந்தையில் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீட்டு எண்கள் 2% சரிவை பதிவு செய்துள்ளன. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள சுமார் 4 லட்சம் பேருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu