இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று உச்சம்

June 7, 2024

கடந்த மே 31ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 651.5 பில்லியன் டாலர்களாகும். இது இந்தியாவின் வரலாற்றில் பதிவாகும் அதிகபட்ச அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகும். மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், “இந்தியாவின் அந்நிய செலாவணி மற்றும் பொருளாதார நிலை சீராக உள்ளது. ஆனாலும், இந்தியா விழிப்புடன் செயல்பட வேண்டி உள்ளது” என்று கூறியுள்ளார். கடந்த மே 31 […]

கடந்த மே 31ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 651.5 பில்லியன் டாலர்களாகும். இது இந்தியாவின் வரலாற்றில் பதிவாகும் அதிகபட்ச அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகும். மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், “இந்தியாவின் அந்நிய செலாவணி மற்றும் பொருளாதார நிலை சீராக உள்ளது. ஆனாலும், இந்தியா விழிப்புடன் செயல்பட வேண்டி உள்ளது” என்று கூறியுள்ளார். கடந்த மே 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 4.8 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2 மாதங்களில் பதிவாகும் அதிகபட்ச உயர்வாகும். அதற்கு முந்தைய வாரத்தில், 2 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கையிருப்பில் இழப்பு பதிவானது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu