இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சமீபத்திய வாரத்தில் $7.6 பில்லியன் அதிகரித்து, ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிலவரப்படி $675 பில்லியனை எட்டியுள்ளது. இதற்கு முந்தைய வாரம் $3.5 பில்லியன் குறைந்திருந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பது என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர் என்பதைக் குறிக்கிறது. எனவே, இந்தியாவின் பொருளாதார நிலைமை உறுதியாக உள்ளது என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சரிசெய்ய அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்டு வருகிறது. இந்த கையிருப்புகளில் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியா வைத்துள்ள இருப்புத் தொகை ஆகியவை அடங்கும். அத்துடன், இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் 83.9725 என்ற உச்சத்தைத் தொட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.