இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 57373 கோடி டாலராக உயர்வு

January 30, 2023

கடந்த ஜனவரி 20ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 1.727 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 573.727 பில்லியன் டாலர்களாக பதிவாகி உள்ளது. கடந்த வருட அக்டோபரில், இரண்டு வருட குறைவான அந்நிய செலாவணி கையிருப்பை பெற்றிருந்த இந்தியா, அதிலிருந்து மீண்டு தற்போது கையிருப்பை உயர்த்தியுள்ளது. ஆனாலும், கடந்த வருட செப்டம்பர் மாதத்தில் பதிவான 642 பில்லியன் டாலர்கள் கையிருப்பை விட தற்போது குறைவாகவே கையிருப்பு பதிவாகியுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி தகவல்கள் படி, […]

கடந்த ஜனவரி 20ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 1.727 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 573.727 பில்லியன் டாலர்களாக பதிவாகி உள்ளது. கடந்த வருட அக்டோபரில், இரண்டு வருட குறைவான அந்நிய செலாவணி கையிருப்பை பெற்றிருந்த இந்தியா, அதிலிருந்து மீண்டு தற்போது கையிருப்பை உயர்த்தியுள்ளது. ஆனாலும், கடந்த வருட செப்டம்பர் மாதத்தில் பதிவான 642 பில்லியன் டாலர்கள் கையிருப்பை விட தற்போது குறைவாகவே கையிருப்பு பதிவாகியுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி தகவல்கள் படி, இந்தியாவின் வெளிநாட்டு நாணயங்கள் சொத்து மதிப்பு 503.65 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு 10 லட்சம் டாலர்கள் குறைந்து 52.6 கோடி டாலராக உள்ளது. இந்தியாவின் தங்கம் கையிருப்பு 82.1 கோடி அதிகரித்து, 471.2 கோடி டாலராக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu