கடந்த டிசம்பர் 22ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 21 மாத உயர்வை பதிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 4.471 பில்லியன் டாலர்கள் உயர்ந்து, 620.441 பில்லியன் டாலர்கள் அளவில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பதிவாகியுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டில் மட்டுமே கிட்டதட்ட 58 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்நியச் செலாவணி கையிருப்பின் வரவாக கிடைத்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2022 ஆம் ஆண்டில், இந்தியாவின் அந்நியச் செலாவணியில் பில்லியன் டாலர்கள் மதிப்பில் வீழ்ச்சி பதிவாகி இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், டிசம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் மொத்த தங்கம் கையிருப்பு மதிப்பு 102 மில்லியன் டாலர்கள் வீழ்ச்சி அடைந்து, 474.74 பில்லியன் டாலர்களாக உள்ளது.