இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதம் : உலக வங்கி கணிப்பு

December 6, 2022

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 6.9 சதவீதம் அளவுக்கு இருக்கும் என திருத்தியமைக்கப்பட்ட கணிப்பை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் துருவ் சர்மா கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை விட தற்போது இந்தியா, கடின சூழலில் இருந்து மீண்டு அதிக உறுதியான நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுருங்கியிருந்த இந்திய பொருளாதாரம் தற்போது மீண்டும் புத்தெழுச்சி பெற்று வலுவாக உள்ளது. கடந்த அக்டோபரில், […]

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 6.9 சதவீதம் அளவுக்கு இருக்கும் என திருத்தியமைக்கப்பட்ட கணிப்பை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் துருவ் சர்மா கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை விட தற்போது இந்தியா, கடின சூழலில் இருந்து மீண்டு அதிக உறுதியான நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுருங்கியிருந்த இந்திய பொருளாதாரம் தற்போது மீண்டும் புத்தெழுச்சி பெற்று வலுவாக உள்ளது. கடந்த அக்டோபரில், நடப்பு 2022-23 நிதியாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஆனது ஜூன் மாத கணிப்பில் இருந்து 1 சதவீதம் குறைத்து 6.5 சதவீதம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் வலுவான பொருளாதார நடவடிக்கைகளால் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதம் என்ற அளவில் இருந்து 6.9 சதவீதம் ஆக உயர்ந்து இருக்கும் என திருத்தியமைக்கப்பட்ட கணிப்பை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu