2024-2025-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதமாக உள்ளது.
2024-2025-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதமாக பதிவாகியுள்ளதாக இந்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. 2023-2024 நிதியாண்டில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை, ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 2024-25 நிதியாண்டின் அதே காலப்பகுதியில் 6.2 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த குறைவுக்கு முக்கிய காரணமாக தயாரிப்பு மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது.
2024-2025 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரை, 2-வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருந்தது. அதேவேளை, 2024-2025 ஆம் ஆண்டின் முழு வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்னதாக 6.4 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அளவு 6.5 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது.2023-24 நிதியாண்டில், முதலில் 8.2 சதவீதமாக கணிக்கப்பட்ட ஜிடிபி, பின்னர் 9.2 சதவீதமாக கணிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.