செப்டம்பர் மாதத்தில், நவரத்தினம் மற்றும் நகைகள் ஏற்றுமதி 27% உயர்வு

October 11, 2022

இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் நகைகளின் ஏற்றுமதியில், இந்த செப்டம்பர் மாதம் 27.17 சதவீத வளர்ச்சி பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதத்தில் நவரத்தினங்கள் மற்றும் நகைகளின் ஏற்றுமதி மதிப்பு 30195.21 கோடி ரூபாய் ஆகும். கடந்த வருடத்தில் இதே மாதத்தில், ஏற்றுமதி மதிப்பு 23743.46 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் தொடக்கம் முதலே நவரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதியில் தொடர்ந்து வளர்ச்சி காணப்பட்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்தமாக 12.82 சதவீத […]

இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் நகைகளின் ஏற்றுமதியில், இந்த செப்டம்பர் மாதம் 27.17 சதவீத வளர்ச்சி பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதத்தில் நவரத்தினங்கள் மற்றும் நகைகளின் ஏற்றுமதி மதிப்பு 30195.21 கோடி ரூபாய் ஆகும். கடந்த வருடத்தில் இதே மாதத்தில், ஏற்றுமதி மதிப்பு 23743.46 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் தொடக்கம் முதலே நவரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதியில் தொடர்ந்து வளர்ச்சி காணப்பட்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்தமாக 12.82 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஏற்றுமதி மதிப்பு 143187.15 கோடி ரூபாயிலிருந்து 161545.06 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நவரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மூலம், 45.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டப்படும் என்று இந்த நிதியாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் மதிப்பில், 45% செப்டம்பர் ஆத்தா நிறைவில் எட்டப்பட்டு விட்டது.

இதுகுறித்து பேசிய ஜெம் அண்ட் ஜுவல்லரி எக்ஸ்போர்ட் ப்ரோமோஷன் கவுன்சில் தலைவர் விபூல் ஷா, "செப்டம்பர் மாதத்தில் நவரத்தினம் மற்றும் நகைகள் ஏற்றுமதியில் பெரிய அளவிலான வளர்ச்சி காணப்பட்டது. இனிவரும் காலமும் பண்டிகை மற்றும் விழாக்கள் நிறைந்த மாதங்கள் என்பதால், ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது” எனக் கூறினார். மேலும், “சில இக்கட்டான சூழல்கள் சரி செய்யப்பட்டால், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான நவரத்தினம் மற்றும் நகைகள் வர்த்தகம் மேலும் வளர்ச்சி அடையும்” என்று கூறினார். அத்துடன், பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதியிலும் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி 4.71% உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் தங்க நகைகள் ஏற்றுமதி 24.88% உயர்ந்துள்ளது. கடந்த வருட செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதியின் வருடாந்திர வளர்ச்சி 21.99 சதவீதமாகும். இதே காலகட்டத்தில் தங்க நகைகள் ஏற்றுமதியின் வளர்ச்சி 25.42 சதவீதமாகும். குறிப்பாக, கற்கள் அல்லாத தங்க நகை ஏற்றுமதி, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 26.92 சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் 30.78 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதே வேளையில், கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகை ஏற்றுமதி, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 24.43 சதவீதமும், வருடாந்திர அடிப்படையில் 22.57 சதவீதமும் உயர்ந்துள்ளது.

மேலும், நடப்பு நிதி ஆண்டில், வண்ணக் கற்களின் ஏற்றுமதி 54.62% உயர்ந்துள்ளது. வெள்ளி ஆபரணங்களின் ஏற்றுமதி 42.68% உயர்ந்துள்ளது. மேலும் பிளாட்டினம் நகைகளின் ஏற்றுமதி 52.46% உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu