ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வரலாற்றுச் சாதனை

October 7, 2023

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவு இந்தியா 100 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.சீனாவின் ஹாங் சேவ் நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகளை பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். 35 விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் இந்தியா 100 பதக்கங்களை பெற்று சதம் எடுத்துள்ளது. […]

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை இல்லாத அளவு இந்தியா 100 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது.சீனாவின் ஹாங் சேவ் நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகளை பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். 35 விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். இதில் இந்தியா 100 பதக்கங்களை பெற்று சதம் எடுத்துள்ளது. தற்போது இந்திய பதக்க பட்டியலில் நான்காவது இடம் பெற்று வருகிறது. இதுவரை இந்தியா 22 தங்கம் 34 வெள்ளி மற்றும் 39 வெண்கலமாக மொத்தம் 95 பதக்கங்களை பெற்றிருந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 9 பதக்கங்களை பெற்றுள்ளது. பின்னர் இன்று இந்தியாவுக்கு மேலும் ஐந்து பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 70 பதக்கம் வென்றது இந்தியாவின் சாதனையாக இருந்து வந்தது.தற்போது இந்தியா 100 பதக்கங்களை பெற்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
நாளையுடன் ஆசிய விளையாட்டு போட்டி முடிவடைகிறது. நாளை கடைசி நாள் கராத்தே போட்டி நடைபெற உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu