கடந்த பிப்ரவரி மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு 8% சரிந்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், தொடர்ந்து 3 மாதங்களாக, இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவின் பிப்ரவரி மாத ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக இடைவெளி 17.43 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் பதிவாகியுள்ளது. இது முந்தைய மாதத்தின் 17.75 அளவை விட சற்று குறைவாகும்.
பிப்ரவரி மாதத்தில், இந்தியாவின் மொத்த இறக்குமதி 51.31 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 55.9 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவானது. அதே வேளையில், இந்தியாவின் ஏற்றுமதி 33.88 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 37.15 பில்லியன் டாலர்களாக பதிவானது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 7.55% உயர்வையும், இறக்குமதி 18.82% உயர்வையும் பதிவு செய்துள்ளன. இவற்றின் மதிப்பு முறையே 405.94 மற்றும் 653.47 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது.