இந்தியாவின் அக்டோபர் மாத தொழில் உற்பத்தி 4% சரிவு

December 12, 2022

கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் தொழில் உற்பத்தி, வருடாந்திர அடிப்படையில் 4% சரிவை சந்தித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. தொழில் உற்பத்திக்கான குறியீட்டு எண், கடந்த வருட அக்டோபர் மாதத்தில் 4.2% உயர்ந்தும், செப்டம்பர் 2022ல் 3.1% உயர்ந்தும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொழில் உற்பத்திக்கான குறியீட்டு எண், செப்டம்பர் மாதத்தில் 133.5 ஆக பதிவாகி இருந்தது. அது அக்டோபர் மாதத்தில் 129.6 ஆக குறைந்துள்ளது. மேலும், உற்பத்தி துறையில் 5.6% சரிவும், சுரங்கம் மற்றும் மின்சாரத் […]

கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் தொழில் உற்பத்தி, வருடாந்திர அடிப்படையில் 4% சரிவை சந்தித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. தொழில் உற்பத்திக்கான குறியீட்டு எண், கடந்த வருட அக்டோபர் மாதத்தில் 4.2% உயர்ந்தும், செப்டம்பர் 2022ல் 3.1% உயர்ந்தும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொழில் உற்பத்திக்கான குறியீட்டு எண், செப்டம்பர் மாதத்தில் 133.5 ஆக பதிவாகி இருந்தது. அது அக்டோபர் மாதத்தில் 129.6 ஆக குறைந்துள்ளது. மேலும், உற்பத்தி துறையில் 5.6% சரிவும், சுரங்கம் மற்றும் மின்சாரத் துறையில் 2.5% மற்றும் 1.2% உயர்வும் முறையே பதிவாகி உள்ளது. அத்துடன், நடப்பு நிதி ஆண்டில், அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், தொழில் உற்பத்தி 5.3% ஆக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 20.5% ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu