இந்தியாவின் ஜனவரி மாத பாமாயில் இறக்குமதி, 25% சரிந்து, 833667 டன் அளவில் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே வேளையில், சோயா எண்ணெய் இறக்குமதி 45% உயர்ந்து, 366625 டன் அளவிலும், சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 58% உயர்ந்து, 461458 டன் அளவிலும் பதிவாகியுள்ளது. மேலும், வெஜிடபிள் ஆயில் இறக்குமதி 6% உயர்ந்து, 1.66 மில்லியன் டன் அளவில் பதிவாகியுள்ளது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் அசோசியேஷன் அமைப்பு இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி மதிப்பு சர்வதேச அளவில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, தற்போதைய சரிவு சர்வதேச வர்த்தகத்தில் பெரும் மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் இது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளன.