மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை குறியீடு 2.04% உயர்ந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் 3.36% அளவில் உயர்ந்திருந்தது. ராய்ட்டர்ஸ் நடத்திய பொருளாதார வல்லுநர்கள் பங்கேற்ற கருத்துக்கணிப்பில் 2.39% அளவில் மொத்த விலை குறியீடு உயரும் என கணிக்கப்பட்டு இருந்தது. அதை விட இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.
ஜூன் மாதத்தில் 1.43% உயர்ந்திருந்த உற்பத்தி பொருட்களின் விலை, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 1.58% உயர்ந்துள்ளது. அதேபோல், எரிபொருள் மற்றும் மின்சார விலைகள் ஜூன் மாதத்தில் 1.03% உயர்ந்திருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 1.72% அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் வெளியான தரவுகளின்படி, உணவு பொருட்களின் விலை வீழ்ச்சியால் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.