இந்திய உற்பத்தி துறை வளர்ச்சி 31 மாத உயர்வு

June 1, 2023

கடந்த மே மாதத்தில், இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்திகள் 31 மாத உயர்வை பதிவு செய்துள்ளன. உற்பத்தி குறியீடு எனப்படும் PMI குறியீட்டு எண், மே மாதத்தில் 58.7 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக 23 மாதங்களாக, 50 அளவை தாண்டி குறியீட்டு எண் பதிவாகி வருகிறது. கடந்த மே மாதத்தில், இந்தியாவின் வேளாண் துறையில் 5.5% மற்றும் உற்பத்தி துறையில் 4.5% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, பல்வேறு துறைகளில், இந்தியா […]

கடந்த மே மாதத்தில், இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்திகள் 31 மாத உயர்வை பதிவு செய்துள்ளன. உற்பத்தி குறியீடு எனப்படும் PMI குறியீட்டு எண், மே மாதத்தில் 58.7 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக 23 மாதங்களாக, 50 அளவை தாண்டி குறியீட்டு எண் பதிவாகி வருகிறது. கடந்த மே மாதத்தில், இந்தியாவின் வேளாண் துறையில் 5.5% மற்றும் உற்பத்தி துறையில் 4.5% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, பல்வேறு துறைகளில், இந்தியா மற்றும் உலக நாடுகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, உற்பத்தி துறையில் வேகமான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சி காரணமாக, இந்திய பொருளாதாரம் 6.1% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வருடாந்திர பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2% ஆக உயர்ந்துள்ளது. இது நிபுணர்கள் கணிப்பை தாண்டி, உயர்வாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu