இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சி கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்து உள்ளதாக ஹெச் எஸ் பி சி அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி துறை குறியீடு என்று அழைக்கப்படும் பி எம் ஐ 58.3 ஆக பதிவாகியுள்ளது. ஜூன் மாதத்தின் பி எம் ஐ 58.5 அளவுக்கு பதிவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், சற்று குறைவாக பதிவாகியுள்ளது. எனினும், கடந்த மே மாதத்தின் 57.5 உடன் ஒப்பிடுகையில், பி எம் ஐ யில் கணிசமான உயர்வு பதிவாகி உள்ளது. மேலும், இந்தியாவின் செயல்திறன் சீரான நிலையில் உள்ளதாக ஹெச் எஸ் பி சி தெரிவித்துள்ளது. அதேபோல், ரைடர்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பிலும் இந்தியாவின் பணவீக்கம் அடுத்த இரு ஆண்டுகளில் 4.5% அளவுக்கு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.