இந்தியாவின் மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் வருடாந்திர அடிப்படையில் 13% உயர்வை பதிவு செய்துள்ளது. மார்ச் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரிவசூல் 160122 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டி வரலாற்றிலேயே இரண்டாவது பெரிய வரி வசூலாக சொல்லப்பட்டுள்ளது.
மொத்த வசூலில், மத்திய ஜிஎஸ்டி 29546 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி 37314 கோடியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஐஜிஎஸ்டி 82907 கோடியாக புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதில், 42503 கோடி - இறக்குமதி பொருட்கள் மூலம் கிடைத்துள்ளது. அத்துடன், செஸ் வரி 10355 கோடி அளவில் பதிவாகியுள்ளது. இதில், 960 கோடி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இறக்குமதி பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 8% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், உள்நாட்டு பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் 14% உயர்வை பதிவு செய்துள்ளது.