கடந்த அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் வர்த்தக இடைவெளி 31.46 பில்லியன் டாலர்கள் அளவில் பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவிற்கு இடையிலான மதிப்பு, வர்த்தக இடைவெளியாக கணக்கிடப்பட்டு வெளியிடப்படுகிறது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் வர்த்தக இடைவெளி உயர்வடைந்துள்ளது. ஏற்றுமதியை பொறுத்தவரை, அக்டோபர் மாதத்தில் 6.21% உயர்வு பதிவாகி, 33.57 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதே சமயத்தில், இந்தியாவின் இறக்குமதி மதிப்பு 65.03 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவின் இறக்குமதி மதிப்பு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.