இந்தியாவின் புதிய சாதனை – DRDO ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் வெற்றிகர சோதனை

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான IADWS, எதிரி வான் தாக்குதலை இடைமறிக்கும் திறன் நிரூபணம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பான (IADWS) முதல் வெற்றிகரமான சோதனையை மேற்கொண்டது. முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த நவீன அமைப்பு, மூன்று வகையான மேம்பட்ட ஆயுதங்களை இணைத்து, எதிரிகளின் வான் தாக்குதல்களை பல்வேறு உயரம் மற்றும் தூரங்களில் இடைமறிக்கும் திறன் கொண்டதாகும். ஒடிசா, சந்திப்பூர் சோதனை தளத்தில் நடைபெற்ற இந்த […]

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான IADWS, எதிரி வான் தாக்குதலை இடைமறிக்கும் திறன் நிரூபணம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பான (IADWS) முதல் வெற்றிகரமான சோதனையை மேற்கொண்டது. முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த நவீன அமைப்பு, மூன்று வகையான மேம்பட்ட ஆயுதங்களை இணைத்து, எதிரிகளின் வான் தாக்குதல்களை பல்வேறு உயரம் மற்றும் தூரங்களில் இடைமறிக்கும் திறன் கொண்டதாகும்.

ஒடிசா, சந்திப்பூர் சோதனை தளத்தில் நடைபெற்ற இந்த சோதனையில், அனைத்து அமைப்புகளும் குறைபாடின்றி செயல்பட்டன. நிகழ்வை மூத்த DRDO விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், "IADWS சோதனை வெற்றி DRDO, ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றம் இந்தியாவின் பாதுகாப்புத்திறனை மேலும் வலுப்படுத்துகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu