இந்திய கடற்படை கடலுக்கு அடியில் நடத்திய முக்கிய ஆயுத சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ), இந்திய கடற்படையுடன் இணைந்து, கடலுக்கு அடியில் நடத்தப்பட்ட முக்கிய ஆயுத சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. 'மல்டி-இன்ஃப்ளூயன்ஸ் மைன்' எனப்படும் இந்த ஆயுதம், எதிரி கப்பல்களை அடையாளம் காணும் வகையில் ஒலி மற்றும் காந்தி புலங்களை உணரக்கூடிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓவின் எம்ஐஜிஎம் தொழில்நுட்பத்தின் மூலம், கடல் பாதுகாப்பு திறனில் இந்தியா ஒரு முக்கிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.