ஈரான் - இஸ்ரேல் இடையே உள்ள மோதல் குறித்து இந்தியா கருத்து

April 15, 2024

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை கைவிட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையான மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளது. அதில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகையை அதிகரிப்பது குறித்து தீவிரமாக கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உடனடியாக தீவிரத்தை குறைக்கவும், கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும், வன்முறையிலிருந்து பின்வாங்கவும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பு மற்றும் ஸ்தரத்தன்மை […]

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை கைவிட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையான மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளது. அதில் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகையை அதிகரிப்பது குறித்து தீவிரமாக கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உடனடியாக தீவிரத்தை குறைக்கவும், கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும், வன்முறையிலிருந்து பின்வாங்கவும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்பவும் அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பு மற்றும் ஸ்தரத்தன்மை காப்பாற்றப்பட வேண்டியது இன்றியமையாததாகும். அங்குள்ள சூழ்நிலைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் எங்கள் தூதரகங்கள் இந்திய சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu