இந்தியாவின் மருந்து சந்தை 8% வளர்ச்சி

January 7, 2023

இந்தியாவின் மருந்து சந்தை வருடாந்திர அடிப்படையில் 8% வளர்ச்சியை பதிவு செய்து, 1.8 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது. பிரபல சந்தை மதிப்பீட்டு நிறுவனமான AWACS இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில், கொரோனா பரவல் காரணமாக, இந்திய மருந்து சந்தையின் வளர்ச்சி 14.9% ஆக பதிவாகி இருந்தது. குறிப்பாக, ஆன்டிபயாட்டிக் விற்பனை 25% வளர்ச்சியை பதிவு செய்தது. இதுவே, 2022-ல், 24% வளர்ச்சியுடன், 22531 கோடி மதிப்பில், அதிகமாக விற்பனையான மருந்து […]

இந்தியாவின் மருந்து சந்தை வருடாந்திர அடிப்படையில் 8% வளர்ச்சியை பதிவு செய்து, 1.8 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது. பிரபல சந்தை மதிப்பீட்டு நிறுவனமான AWACS இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில், கொரோனா பரவல் காரணமாக, இந்திய மருந்து சந்தையின் வளர்ச்சி 14.9% ஆக பதிவாகி இருந்தது. குறிப்பாக, ஆன்டிபயாட்டிக் விற்பனை 25% வளர்ச்சியை பதிவு செய்தது. இதுவே, 2022-ல், 24% வளர்ச்சியுடன், 22531 கோடி மதிப்பில், அதிகமாக விற்பனையான மருந்து துறையாக உள்ளது.

2022 ஆம் ஆண்டில், இதய நோய் சம்பந்தப்பட்ட மருந்து சந்தையின் வளர்ச்சி 8% ஆக பதிவாகி, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது மொத்த மருந்து சந்தை மதிப்பில் 13% என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் இடத்தில், 10% வளர்ச்சியுடன், செரிமானம் சம்பந்தப்பட்ட மருந்து விற்பனை பதிவாகியுள்ளது. இவைத் தவிர, இதர துறைகளின் மருந்து விற்பனை 19% வருடாந்திர உயர்வை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, சுவாச பிரச்சனை சம்பந்தப்பட்ட மருந்து விற்பனை 14448 கோடியாக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu