இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடி - மக்களவையில் அரசு தகவல்

கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடி என்று மதிப்பிடப்பட்டு இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:- கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றிய மக்கள்தொகை மதிப்பீட்டுக்கான தொழில்நுட்ப குழுவின் அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய மக்கள்தொகை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதுபோல், கடந்த 1-ந் தேதி […]

கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடி என்று மதிப்பிடப்பட்டு இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:- கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவின் மக்கள்தொகை 139 கோடியே 23 லட்சத்து 29 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றிய மக்கள்தொகை மதிப்பீட்டுக்கான தொழில்நுட்ப குழுவின் அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய மக்கள்தொகை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதுபோல், கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 56 லட்சத்து 71 ஆயிரம் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu