கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், இந்தியாவின் மின் நுகர்வு 8% அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 847 பில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் இந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே, 2022 ஆம் ஆண்டில், 786 பில்லியன் யூனிட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
கடந்த 6 மாதங்களில், இந்தியாவில் சீரற்ற முறையில் பருவமழை பதிவானது. இதன் விளைவாக, மின் நுகர்வு இந்த அளவில் பதிவாகியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகமான வெப்பம் நிலவியதால், மின் நுகர்வு கணிசமாக உயர்ந்ததாக தெரிவித்துள்ளனர். மின் தேவையும் இந்த காலகட்டத்தில் உச்சத்தை தொட்டுள்ளதாக எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.