பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு வான்வெளியை முடக்கியதற்கான தாக்கம் நிதியில் எதிரொலித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சிந்து நதிநீரை நிறுத்தியது. அதற்குப் பதிலாக பாகிஸ்தான், இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை ஏப்ரல் 24 முதல் மூடியது. இதன் காரணமாக பாகிஸ்தான் ஜூன் 30 வரை ₹127 கோடி இழப்பை சந்தித்துள்ளது என அதன் பாராளுமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்திய விமானங்கள் இயக்கப்படாததால் இந்த இழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் வருவாய் 2019 இல் 5.08 லட்சம் டாலரிலிருந்து 2025 இல் 7.6 லட்சம் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியாவுடன் மோதல் போக்கை தொடரும் நிலையில், பாகிஸ்தானுக்கு பொருளாதார பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.














