இந்தியாவின் டிசம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.7% ஆக பதிவு

January 13, 2023

வருடாந்திர அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.72% ஆக பதிவாகியுள்ளது. இதுவே கடந்த நவம்பர் மாதத்தில் 5.88% ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக, மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 2-6% வரம்புக்குள் பணவீக்கம் பதிவாகியுள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில், பணவீக்க விகிதம் 0.4% குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 0.11% குறைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதத்தில், உணவு பணவீக்கம் 4.19% ஆக பதிவாகியுள்ளது. மேலும், […]

வருடாந்திர அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.72% ஆக பதிவாகியுள்ளது. இதுவே கடந்த நவம்பர் மாதத்தில் 5.88% ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக, மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 2-6% வரம்புக்குள் பணவீக்கம் பதிவாகியுள்ளது. மேலும், டிசம்பர் மாதத்தில், பணவீக்க விகிதம் 0.4% குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 0.11% குறைந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் மாதத்தில், உணவு பணவீக்கம் 4.19% ஆக பதிவாகியுள்ளது. மேலும், காய்கறிகளுக்கான பணவீக்கம் 15.08% ஆகவும், பருப்பு வகைகளுக்கான பணவீக்கம் 13.79% ஆகவும், எரிபொருளுக்கான பணவீக்கம் 10.97% ஆகவும் பதிவாகியுள்ளது. உணவு பணவீக்கம் குறைந்துள்ளது இந்திய மக்களுக்கு நற்செய்தியாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவின் பணவீக்க விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாக மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu