நவம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.88% - 10 மாதங்களுக்கு பின், ஆர் பி ஐ விளிம்புக்குள் வந்துள்ளது

December 12, 2022

இந்தியாவில், நுகர்வோர் விலை அடிப்படையிலான சில்லறை பணவீக்கம், நவம்பர் மாதத்தில் 5.88% ஆக பதிவாகியுள்ளது. மேலும், நவம்பர் மாதத்தில், கடந்த 11 மாதத்தில் குறைவான பணவீக்கம் பதிவாகியுள்ளது. அத்துடன் 10 மாதங்களுக்குப் பின்னர், மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 2 - 6% விளிம்புக்குள் பணவீக்கம் பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.77% ஆக இருந்தது. எனவே, மாதாந்திர அடிப்படையில் 0.11% குறைந்து, 5.88% ஆக பணவீக்கம் பதிவாகியுள்ளது. நவம்பர் மாதத்தில் இந்தியாவின் உணவு […]

இந்தியாவில், நுகர்வோர் விலை அடிப்படையிலான சில்லறை பணவீக்கம், நவம்பர் மாதத்தில் 5.88% ஆக பதிவாகியுள்ளது. மேலும், நவம்பர் மாதத்தில், கடந்த 11 மாதத்தில் குறைவான பணவீக்கம் பதிவாகியுள்ளது. அத்துடன் 10 மாதங்களுக்குப் பின்னர், மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 2 - 6% விளிம்புக்குள் பணவீக்கம் பதிவாகியுள்ளது.

அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.77% ஆக இருந்தது. எனவே, மாதாந்திர அடிப்படையில் 0.11% குறைந்து, 5.88% ஆக பணவீக்கம் பதிவாகியுள்ளது. நவம்பர் மாதத்தில் இந்தியாவின் உணவு பணவீக்கம் 4.67% ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 7.01% ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை 40% வரை குறையும் என நம்பப்படுகிறது. மேலும், காய்கறிகளுக்கான பணவீக்க விகிதம் 8.08% சரிந்துள்ளது. அதே வேளையில், எரிபொருளுக்கான பணவீக்கம் 10.62% உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் பணவீக்கம் 12.96% ஆக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu