இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.52% ஆக உயர்வு

February 14, 2023

தொடர்ந்து 2 மாதங்களாக சரிந்து வந்த இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ஜனவரி மாதத்தில் 6.52% ஆக உயர்ந்துள்ளது. மத்திய புள்ளியில் ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 40% அளவிற்கு சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.72% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இது மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 2-6% வரம்பை தாண்டி பதிவாகியுள்ளது. காய்கறிகள் பணவீக்கம் […]

தொடர்ந்து 2 மாதங்களாக சரிந்து வந்த இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ஜனவரி மாதத்தில் 6.52% ஆக உயர்ந்துள்ளது. மத்திய புள்ளியில் ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 40% அளவிற்கு சில்லறை பணவீக்கம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.72% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இது மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 2-6% வரம்பை தாண்டி பதிவாகியுள்ளது.

காய்கறிகள் பணவீக்கம் 15.08% ல் இருந்து 11.7% ஆக சரிந்துள்ளது. மேலும், எரிபொருள் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான சில்லறை பணவீக்கம் 10.97% ல் இருந்து 10.84% ஆக சரிந்துள்ளது. எனினும், மற்ற துறைகளில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக, பொருளாதார வல்லுனர்கள் கூறுவதாவது: “இரண்டு மாதங்கள் மட்டுமே பணவீக்கம் குறைந்துள்ளது. இது மீண்டும் அதிகரித்துள்ளதால், நாட்டின் பொருளாதார நிலைமை இன்னும் சீர் நிலையை அடையவில்லை என்பது தெரிகிறது” என்று தெரிவிக்கின்றனர். பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஓராண்டில், வட்டி விகிதங்கள் 225 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu