நடப்பு ஆண்டில் அதிக வளர்ச்சியை கண்ட இந்திய பணக்காரர்கள்

November 30, 2022

நடப்பு ஆண்டில் உலக பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும், இந்திய பணக்காரர்கள் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளனர். 'போர்ப்ஸ்' நிறுவனம் 2022ம் ஆண்டுக்கான 'டாப் - 100' இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 2.05 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 65.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தில் கவுதம் அதானி உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு 12.30 லட்சம் கோடி ரூபாயாகும். […]

நடப்பு ஆண்டில் உலக பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும், இந்திய பணக்காரர்கள் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளனர்.

'போர்ப்ஸ்' நிறுவனம் 2022ம் ஆண்டுக்கான 'டாப் - 100' இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 2.05 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 65.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில், முதலிடத்தில் கவுதம் அதானி உள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு 12.30 லட்சம் கோடி ரூபாயாகும். இந்தியாவின் டாப் - 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பில் 30 சதவீதம் கவுதம் அதானியுடையது. அதானிக்கு அடுத்த இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 7.22 லட்சம் கோடி ரூபாயாகும்.

மூன்றாவது இடத்தில் 'டிமார்ட்' நிறுவனத்தின் ராதாகிஷன் தமானி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2.26 லட்சம் கோடி ரூபாயாகும். நான்காவது இடத்தில் 'சீரம் இன்ஸ்டிடியூட்' நிறுவனத்தின் சைரஸ் உள்ளார். இந்த ஆண்டின் பட்டியலில், மொத்தம் 9 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர் என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu