ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் புதிய உச்சம்

July 3, 2023

இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் கடந்த ஜூன் மாதத்தில் புதிய உச்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நாள் ஒன்றுக்கு 2.2 மில்லியன் பேரல்கள் என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக 10 மாதங்களாக ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் உயர்வு பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இது சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் […]

இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் கடந்த ஜூன் மாதத்தில் புதிய உச்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நாள் ஒன்றுக்கு 2.2 மில்லியன் பேரல்கள் என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொடர்ச்சியாக 10 மாதங்களாக ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் உயர்வு பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இது சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவைவிட கூடுதலாக உள்ளது.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மிக முக்கிய நாடாக இந்தியா மாறியுள்ளது. குறிப்பாக, இந்திய அரசால் இயக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனம் ரஷ்ய கச்சா எண்ணையை அதிகமாக இறக்குமதி செய்கிறது. அதைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது. மேலும், ரஷ்ய கச்சா எண்ணெய்யின் சராசரி விலை பேரல் ஒன்றுக்கு 68.21 டாலராக உள்ளது. அதே வேளையில், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் 86.96 டாலர்களுக்கு வழங்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu