9 மாத உச்சத்தில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி

May 21, 2024

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 9 மாத உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 2022ல் உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய காலம் முதல் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால் இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், நாள் ஒன்றுக்கு 1.8 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியா சார்பில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய […]

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 9 மாத உச்சத்தை பதிவு செய்துள்ளது.

கடந்த 2022ல் உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய காலம் முதல் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால் இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், நாள் ஒன்றுக்கு 1.8 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய் இந்தியா சார்பில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 8.2% உயர்வாகும். மேலும், உலக அளவில் 3வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக இருக்கும் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 38% ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் தொடர்ந்து ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. ரஷ்யாவை தொடர்ந்து ஈராக் மற்றும் சவுதி அரேபியா உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu