இந்தியாவின் நவம்பர் மாத ஸ்டீல் உற்பத்தி 5% உயர்ந்து, 10.34 மில்லியன் டன்களாக உள்ளது என்று ஸ்டீல் மின்ட் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், செயில், டாடா ஸ்டீல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், ஜே எஸ் பி எல், ஏ எம் எம் எஸ் இந்தியா மற்றும் ஆர் ஐ என் எல் ஆகிய 6 நிறுவனங்கள், ஸ்டீல் உற்பத்தியில் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் மட்டுமே 6.28 மில்லியன் டன்கள் ஸ்டீல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.
கடந்த வருட நவம்பர் மாதத்தில், இந்தியா, 9.88 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், பினிஷ்ட் ஸ்டீல் உற்பத்தி 3.41% உயர்ந்து, 9.55 மில்லியன் டன்களாக பதிவாகியுள்ளது. மேலும், ஸ்டீல் நுகர்வு 13.42% உயர்ந்து, 9.66 மில்லியன் டன்களாக உள்ளது.