இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், அதன் வாகன விலைகளை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயா்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் செய்திக்குறிப்பில், "ஜனவரி 1-ஆம் தேதி முதல், டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பேருந்துகள் மற்றும் லாரிகள் விலைகள் 2 சதவீதம் வரை அதிகரிக்கும். விலை உயர்வு ஒவ்வொரு வகை வாகனத்திற்கும் மாறுபட்டாலும், இது அனைத்து வகைகளுக்கும் பொருந்தும். உற்பத்தி செலவுகளை ஈடு செய்யும் வகையில், இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.