டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2023 ஆம் ஆண்டில் 3வது முறையாக வாகன விலை உயர்வை அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சரக்கு வாகனங்களின் விலைகள் 3% வரை உயர்த்தப்படலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் டாடா மோட்டார்ஸ் சரக்கு வாகனங்களின் விலைகள் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஜனவரி மாதத்தில் 1.2% மற்றும் மார்ச் மாதத்தில் 5% அளவில் டாடா மோட்டார்ஸ் சரக்கு வாகனங்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. தற்போது கூடுதலாக 3% விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. BS6 மாற்றங்களுக்கு ஏற்ப வாகனங்கள் தரம் உயர்த்தப்பட்டு வருவதால் இந்த விலை ஏற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது.