இலங்கை: காற்றாலை திட்டத்திற்காக அதானி குழுமம் 442 மில்லியன் டாலர்கள் முதலீடு

February 23, 2023

இலங்கை நாடு திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், தனது முதல் வெளிநாட்டு முதலீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம், இலங்கையில், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்காக சுமார் 442 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது. இலங்கையைச் சேர்ந்த முதலீட்டு ஆணையம், அதானி குழுமத்தை சேர்ந்த அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இந்த முதலீடுகளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் சார்பாக, 2 காற்றாலை நிலையங்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் […]

இலங்கை நாடு திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், தனது முதல் வெளிநாட்டு முதலீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம், இலங்கையில், காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்காக சுமார் 442 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது. இலங்கையைச் சேர்ந்த முதலீட்டு ஆணையம், அதானி குழுமத்தை சேர்ந்த அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இந்த முதலீடுகளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் சார்பாக, 2 காற்றாலை நிலையங்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி மற்றும் அவரது அதானி குழுமம் மீது நிதி முறைகேடுகள் குவிந்து வரும் நிலையில், இந்த செய்தி மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் படி, சுமார் 442 மில்லியன் மதிப்பில் 2025 ஆம் ஆண்டு வாக்கில் 2 காற்றாலை நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு, 700 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான துறைமுகத் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்கியதைத் தொடர்ந்து, மற்றொரு திட்டமும் இலங்கை சார்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu