இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் - மார்ச்சில் 7.8% ஆக உயர்வு

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் CMIE அமைப்பு, இந்தியாவின் வேலை வேலைவாய்ப்பின்மை விகிதம், 3 மாத உச்சமாக மார்ச்சில், 7.8% ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது. தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக வேலை வாய்ப்பின்மை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3% ஆக பதிவானது. இது ஜனவரி மாதத்தில் 7.14% ஆக சரிந்தது. ஆனால், தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளால், பிப்ரவரி மாதத்தில் 7.45% ஆக உயர்ந்து, இறுதியாக மார்ச் மாதத்தில் […]

இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் CMIE அமைப்பு, இந்தியாவின் வேலை வேலைவாய்ப்பின்மை விகிதம், 3 மாத உச்சமாக மார்ச்சில், 7.8% ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது. தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக வேலை வாய்ப்பின்மை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில், இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3% ஆக பதிவானது. இது ஜனவரி மாதத்தில் 7.14% ஆக சரிந்தது. ஆனால், தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளால், பிப்ரவரி மாதத்தில் 7.45% ஆக உயர்ந்து, இறுதியாக மார்ச் மாதத்தில் 7.8% ஆக பதிவாகி உள்ளது. குறிப்பாக, நகரப் பகுதிகளில் 8.4% மற்றும் கிராம பகுதிகளில் 7.5% என்ற விகிதங்களில் வேலைவாய்ப்பின்மை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, பிப்ரவரி மாதத்தில் 36.9% ஆக இருந்த வேலைவாய்ப்பு விகிதம், மார்ச் மாதத்தில் 36.7% ஆக பதிவாகியுள்ளது. இதுவே, எண்ணிக்கை அடிப்படையில், 409.9 மில்லியனில் இருந்து 407.6 மில்லியனாக சரிந்துள்ளது.

மாநிலங்கள் அடிப்படையில், 26.8% வேலைவாய்ப்பின்மை பதிவாகி, அரியானா முதல் இடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, ராஜஸ்தான் (26.4%), ஜம்மு காஷ்மீர் (23.1%), சிக்கிம் (20.7%), ஜார்கண்ட் (17.5%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடைசி இடத்தில், 0.8% வேலைவாய்ப்பின்மை விகிதத்துடன், உத்தரகாண்ட் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. அடுத்தடுத்த இடங்களில், புதுச்சேரி (1.5%), குஜராத் (1.8%), கர்நாடகா (2.3%), மேகாலயா மற்றும் ஒடிசா (தலா 2.6%) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu