சிங்கப்பூரின் 'பேநவ்' உடன் இணைந்து இந்தியாவின் யு.பி.ஐ., செயல்பட திட்டம்

January 11, 2023

சிங்கப்பூரின் 'பேநவ்' உடன் இணைந்து இந்தியாவின் யு.பி.ஐ., செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூர் மத்திய வங்கியின் தலைமை நிதிதொழில்நுட்ப அதிகாரி சொப்னெந்து மொஹந்தி கூறுகையில், இந்தியாவின் யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளம் மற்றும் சிங்கப்பூரின் 'பேநவ்' ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உடனடியாகவும், மிகக் குறைந்த கட்டணத்திலும் மொபைல் போன் வழியாகவே வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இந்த தளங்களை பயன்படுத்தும் போது, பணம் அனுப்பும் […]

சிங்கப்பூரின் 'பேநவ்' உடன் இணைந்து இந்தியாவின் யு.பி.ஐ., செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூர் மத்திய வங்கியின் தலைமை நிதிதொழில்நுட்ப அதிகாரி சொப்னெந்து மொஹந்தி கூறுகையில், இந்தியாவின் யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளம் மற்றும் சிங்கப்பூரின் 'பேநவ்' ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படவுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உடனடியாகவும், மிகக் குறைந்த கட்டணத்திலும் மொபைல் போன் வழியாகவே வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இந்த தளங்களை பயன்படுத்தும் போது, பணம் அனுப்பும் செலவு தற்போது இருப்பதிலிருந்து கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவுக்கு குறையும்.

மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூரில் பொருட்கள் வாங்கினால் யு.பி.ஐ., தளத்தை பயன்படுத்தி எளிதாக பணம் செலுத்தலாம். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பணப்பரிமாற்றங்கள் எளிதாகும் என்றும் அவர் கூறினார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 762

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu