இந்தியாவின் நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.6% குறைந்துள்ளது.

September 1, 2022

புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) தரவின் படி கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 12.6% இ௫ந்த நிலையில் இந்த ஆண்டு அதே மாதத்தில் 7.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. வாராந்திர கணக்கெடுப்பின் படி நகர்ப்புறங்களில் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் (9.5 சதவீதம்) ,ஆண்களுக்கான வேலையின்மை விகிதத்தை (7.1 சதவீதம்) விட அதிகமாக உள்ளது. அதாவது 2021 ஏப்ரல்-ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 12.6 சதவீதமாக இருந்தது. அதே போல் ஜூலை-செப்டம்பர் 2021 இல், […]

புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) தரவின் படி கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 12.6% இ௫ந்த நிலையில் இந்த ஆண்டு அதே மாதத்தில் 7.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

வாராந்திர கணக்கெடுப்பின் படி நகர்ப்புறங்களில் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் (9.5 சதவீதம்) ,ஆண்களுக்கான வேலையின்மை விகிதத்தை (7.1 சதவீதம்) விட அதிகமாக உள்ளது. அதாவது 2021 ஏப்ரல்-ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 12.6 சதவீதமாக இருந்தது. அதே போல் ஜூலை-செப்டம்பர் 2021 இல், வேலையின்மை விகிதம் 9.8 சதவீதமாக இருந்தது. மேலும் அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் வேலையின்மை விகிதம் மேலும் 8.7 சதவீதமாகக் குறைந்தது. 2021-22 நிதியாண்டில், ஜனவரி-மார்ச் மாதங்களில் வேலையின்மை விகிதம் 8.2 சதவீதமாக இருந்தது. பின் ஏப்ரல் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.6 சதவீதமாக குறைந்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் நடப்பு வாராந்திர நிலையில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR ) இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 47.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் தொழிலாளர் மக்கள்தொகை விகிதம் (WPR) கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதத்தில் 40.9 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூனில் 43.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu