தொடர்ந்து 6 வது மாதமாக இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் இறங்கு முகத்தில் உள்ளது. குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில், ரசாயன பொருட்கள், எண்ணெய்கள் போன்றவற்றின் விலை வெகுவாக குறைந்தது. அத்துடன், ஜவுளித்துறை, உலோகத்துறை மற்றும் உணவுத்துறை ஆகியவற்றிலும் முக்கிய பொருட்களின் விலைகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் விளைவாக, செப்டம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் மைனஸ் 0.26% ஆக பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் தொடர்ச்சியாக மைனஸ் விகிதத்தில் பதிவாகி வருகிறது. இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்குவதை முன்னிட்டு, பணவீக்கம் குறித்த கண்காணிப்பில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.