இண்டிகோ நிறுவனம், ஐரோப்பாவிற்கு 32 இணைப்பு விமானங்களை அறிவித்துள்ளது

December 5, 2022

இண்டிகோ விமான நிறுவனம், டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஐரோப்பாவிற்கு 32 புதிய இணைப்பு விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கோட் ஷேரிங் ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் இணைந்துள்ளன. கோட் ஷேரிங் மூலம், ஒரு விமான நிறுவனத்தின் தளத்தில், மற்றொரு விமான நிறுவனத்தின் விமான பயண சீட்டுகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல், மிலன், மேன்செஸ்டர், பெர்மிங்காம், ரோம், வெனிஸ் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில், புதிய […]

இண்டிகோ விமான நிறுவனம், டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஐரோப்பாவிற்கு 32 புதிய இணைப்பு விமானங்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. கோட் ஷேரிங் ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் இணைந்துள்ளன. கோட் ஷேரிங் மூலம், ஒரு விமான நிறுவனத்தின் தளத்தில், மற்றொரு விமான நிறுவனத்தின் விமான பயண சீட்டுகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் டிசம்பர் 7ஆம் தேதி முதல், மிலன், மேன்செஸ்டர், பெர்மிங்காம், ரோம், வெனிஸ் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில், புதிய விமான சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்வதேச விமான பயணம் எளிதாக்கப்படுவதுடன், சுற்றுலா மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய, இண்டிகோ நிறுவனத்தின் சர்வதேச வணிகப் பிரிவின் தலைவர் வினய் மல்ஹோத்ரா, டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள கோட் ஷேரிங் ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu