ஒரு வருட காலத்திற்குள் 10 கோடி பேர் பயணம் செய்த முதல் இந்திய விமான நிறுவனமாக இண்டிகோ சாதனை படைத்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டில் 7.8 கோடி பேர் பயணித்தனர். இது மிக முக்கிய மைல்கல்லாக சொல்லப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டில் இதுவரை 10 கோடி பேர் இண்டிகோ விமானங்களில் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22% உயர்வாகும். நேற்று, டெல்லி - பெங்களூரு விமான சேவை நிறைவடைந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்தின் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இண்டிகோ விமான நிறுவனம், இந்தியாவில் விமான சேவைகளை அதிகரிக்கும் வகையிலும், வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.