இண்டிகோ நிறுவனத்தில் தங்களுக்கு உள்ள பங்குகளை, இண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகேஷ் கங்குவாலின் குடும்பத்தினர் விற்க உள்ளனர். இண்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான இன்டர் க்ளோப் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தில், தங்களுக்கு உள்ள 5 முதல் 8% பங்குகளை அவர்கள் விற்க உள்ளனர். இதன் மதிப்பு 75 பில்லியன் ரூபாய் என கூறப்படுகிறது. வரும் ஜூலை 15ஆம் தேதி, பிளாக் டீல் மூலம் இந்த பங்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
முன்னதாக, கடந்த 2022 பிப்ரவரியில், இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து ராகேஷ் கங்குவால் வெளியேறினார். அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில், இண்டிகோ நிறுவனத்தில் தனக்கு இருக்கும் பங்குகளை படிப்படியாக விற்க உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த பங்கு விற்பனை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்த செய்தி வெளியான பின்னர், இண்டிகோ நிறுவனத்தின் பங்குகள் 3.1% ஆக குறைந்துள்ளன.